வரலாற்றில் முதல் முறை; நியூயார்க் நகர மேயரானார் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானி..!
Zohra Mamdani became the mayor of New York City
அமேரிக்கா, நியூயார்க் நகரின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானி, குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக நியூயார்க் நகரின் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் நடந்த மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்.
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக நியூயார்க் நகர மேயராக இஸ்லாமியர் ஒருவர் என்ற வரலாறு படைத்துள்ளார். அந்நகரில் கைவிடப்பட்ட வரலாற்று சிறப்புடைய பழைய சிட்டி ஹால் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் வைத்து மம்தானி, மேயராகப் பதவியேற்றார்.

பதவி ஏற்று கொண்ட, பிறகு மம்தானி பேசுகையில் கூறியதாவது: ''நியூயார்க் நகரின் மேயராகப் பதவியேற்பது வாழ்நாள் மரியாதையாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி'' என்று குறிப்பிட்டார்.
அத்துடன், பழைய சுரங்கப்பாதை நிலையம் நமது நகரத்தின் உயிர்ச்சக்தி, சுகாதாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான பொதுப் போக்குவரத்தின் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாகும் என்றும் தெரிவித்தார்.
உகாண்டா நாட்டின் கம்பாலா நகரில் பிறந்த ஜோஹ்ரான் மம்தானிக்கு, 05 வயது இருக்கும் போது அவரது பெற்றோர், இந்தியர்களான சினிமா இயக்குனர் மீரா நாயர், மஹ்மூத் மம்தானி ஆகியோர், அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Zohra Mamdani became the mayor of New York City