சாய் அப்யங்கர் ஆதிக்கம்... 2025-ன் டாப் 10 தமிழ் பாடல்கள்: ஸ்பாடிஃபை வெளியிட்ட அதிரடிப் பட்டியல்!
2025 top tamil song in spottify
2025-ஆம் ஆண்டு தமிழ் இசைத் துறைக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அனிருத், சந்தோஷ் நாராயணன் மற்றும் சாய் அப்யங்கர் ஆகியோரின் ஆதிக்கம் இப்பட்டியலில் அப்பட்டமாகத் தெரிகிறது.
ஸ்பாடிஃபை டாப் 10 பாடல்கள் (ஜன 1 - டிச 30, 2025):
1.ஊரும் ப்ளட் - டியூட்- சாய் அப்யங்கர் - 8.96 கோடி+ ஸ்ட்ரீமிங்
2.மோனிகா - கூலி -அனிருத் - 8.06 கோடி+ ஸ்ட்ரீமிங்
3.கனிமா - ரெட்ரோ - சந்தோஷ் நாராயணன் - 6.56 கோடி+ ஸ்ட்ரீமிங்
4.வழித்துணையே - டிராகன் லியோன் ஜேம்ஸ் - 6.21 கோடி+ ஸ்ட்ரீமிங்
5.சித்திர புத்திரி - ஆல்பம் - சாய் அப்யங்கர் - 6.10 கோடி+ ஸ்ட்ரீமிங்
6.பவர்ஹவுஸ் - கூலி - அனிருத் - 6.08 கோடி+ ஸ்ட்ரீமிங்
7.கண்ணாடி பூவே - ரெட்ரோ சந்தோஷ் நாராயணன் - 74 லட்சம்+ ஸ்ட்ரீமிங்
8.பதிக்கிச்சு - விடாமுயற்சி - அனிருத் - 4.50 கோடி+ ஸ்ட்ரீமிங்
9.பொட்டல முட்டாயே - தலைவன் தலைவி - சந்தோஷ் நாராயணன் - 3.76 கோடி+ ஸ்ட்ரீமிங்
10.முத்த மழை (Reprise) - தக் லைஃப் - ஏ.ஆர். ரஹ்மான் - 3.46 கோடி+ ஸ்ட்ரீமிங்
சாய் அப்யங்கர் சாதனை: 'ஊரும் ப்ளட்' பாடல் 8.9 கோடிக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களுடன் முதலிடத்தைப் பிடித்து 2025-ன் மிகப்பெரிய ஹிட்டாக உருவெடுத்துள்ளது.
இசையமைப்பாளர்கள் ஆதிக்கம்: அனிருத் மற்றும் சந்தோஷ் நாராயணன் தலா 3 பாடல்களுடன் இப்பட்டியலில் அதிக இடங்களைப் பிடித்துள்ளனர்.
இண்டிபெண்டெண்ட் இசை: 'சித்திர புத்திரி' போன்ற சுயாதீன ஆல்பங்கள் திரைப்பாடல்களுக்கு இணையாக ஸ்பாடிஃபை பிளேலிஸ்ட்களில் ஆதிக்கம் செலுத்தியது ஒரு முக்கிய மாற்றமாகும்.
2025-ஆம் ஆண்டு தமிழ் இசை ஸ்ட்ரீமிங் தளங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களைச் சென்றடைந்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
English Summary
2025 top tamil song in spottify