'விவாகரத்து செய்த ஆண்கள் மறுமணம் செய்தால் கொண்டாடும் சமூகம் பெண்களை சுயநலவாதிகள் என முத்திரை குத்துகிறது'; நடிகை மலைக்கா அரோரா வேதனை..! - Seithipunal
Seithipunal


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை மலைக்கா அரோரா, இவர் கடந்த 1998-ஆம் ஆண்டு நடிகர் அர்பாஸ் கானை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் உள்ளார். குறித்த தம்பதி கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.

அதன் பின்னர் மலைக்கா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூருடன் நெருங்கி பழகி வந்தார், ஆனால், அவர்களும் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். இதற்கிடையே அர்பாஸ் கான், ஷூரா கான் என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பெண்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் மலைக்கா அரோரா கலந்து கொண்டார். அப்போது அவர் விவாகரத்துக்குப் பின் தான் சந்தித்த அவமானங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து மனதிறந்து பேசியுள்ளார். 

அதாவது, விவாகரத்து செய்த போது பொதுமக்களிடம் இருந்து மட்டுமின்றி, தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டதாக கூறியுள்ளார்.

அத்துடன் அவர்கள், 'எப்படி உன்னுடைய தனிப்பட்ட மகிழ்ச்சியை மட்டும் முக்கியமாக நினைக்கிறாய்..? என தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும், ஆண்கள் விவாகரத்து செய்துவிட்டு வயது குறைந்த பெண்ணை மறுமணம் செய்தால் சமூகம் அவர்களை கொண்டாடுகிறது. ஆனால், பெண்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக ஒரு முடிவு எடுத்தால் அவர்களை சுயநலவாதிகள் என முத்திரை குத்துவது வேதனையளிக்கிறது என்று பேசியுள்ளார். 

 மேலும், அந்த நேரத்தில் பல சிரமங்களை சந்தித்தாலும், மன அமைதிக்காகவும், எனது மகனின் எதிர்காலத்திற்காகவும் நான் எடுத்த முடிவு குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பு பொருளாதார ரீதியாகத் தனித்து நிற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Malaika Arora expresses her anguish that divorced women are branded as selfish if they remarry


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->