ஹீரோவாக குரங்கு...! ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம் ...சினிமா உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்...!
monkey hero AR Murugadoss next film astonish film world
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் ஏ.ஆர். முருகதாஸ், ‘தீனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப் படங்களை வழங்கியவர்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படத்தை இயக்கிய அவர், அந்தப் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், தனது அடுத்த படத்தைப் பற்றிய ஆச்சரிய தகவலை ஒரு நேர்காணலில் முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில்,"என் அடுத்த படம் முற்றிலும் வித்தியாசமான முயற்சியாக இருக்கும். இதில் ஒரு குரங்கை ஹீரோவாக வைத்து, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் படம் உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.
உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே இந்தக் கதை என் மனதில் இருந்தது. உண்மையில் இதைத்தான் என் முதல் படமாக எடுக்க நினைத்தேன்.
குழந்தைகளை மையமாகக் கொண்டு, அவர்களுக்கு பிடிக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாகும்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
monkey hero AR Murugadoss next film astonish film world