போதை, இனவெறி, வன்முறை… சென்னையே அபாய மண்டலமா? - திருத்தணி தாக்குதல் விவகாரத்தில் சந்தோஷ் நாராயணன் கடும் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே, வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சிறார்களே பட்டாக்கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கும் அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ வெளியாகி, தமிழகமெங்கும் பெரும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பின்னணியில், பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அதில் அவர்,“சென்னையில் நான் வசிக்கும் பகுதி தற்போது போதைப் பொருளுக்கு அடிமையான குண்டர்கள், குற்றவாளிகள் காரணமாக மிக அபாயகரமான இடமாக மாறியுள்ளது.

என் ஸ்டுடியோ சுற்றுவட்டாரத்தில் பணியாற்றும் பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர்கள் சமீப காலமாக தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் ஈடுபடுபவர்களில் பலர் இனவெறியை பெருமையாக கருதி, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை ஒட்டுமொத்தமாக வெறுத்து தாக்குகின்றனர்.

மேலும், அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இத்தகைய நபர்களுக்கு ஆதரவாக சில உள்ளூர் அரசியல் குழுக்களும், சாதி அடிப்படையிலான அமைப்புகளும் முன்வருவது.

உண்மை நிலையை உணர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க நாம் ஏன் தவறுகிறோம்? இது என்னை உட்பட ஒவ்வொருவரும் பொறுப்புடன் சிந்தித்து செயல்பட வேண்டிய மிக முக்கியமான நேரம்” என்று தனது வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drugs racism violence Chennai becoming danger zone Santhosh Narayanan issues strong warning regardingTiruttani attack incident


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->