இந்தோனேஷியாவில் சீற்றத்துடன் காணப்படும் பர்னி தெலோங் எரிமலை; மக்கள் வெளியேற்றம்..!
The Mount Burni Telong volcano in Indonesia is showing signs of unrest
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. அந்நாட்டில் ஆச்சே மாகாணத்தில் பெனர் மெரியா மாவட்டத்தில் 8,600 அடி உயரமுள்ள பர்னி தெலோங் எரிமலையில், ஏழு முறை பலத்த அதிர்வுகள் ஏற்பட்டன. தற்போது குறித்த எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இந்த அதிர்வு, 5 கி.மீ. துாரம் வரை உணரப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை முதல் இதன் செயல்பாடு அதிகரித்து வந்த நிலையில், சில மாதங்களாக மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் எரிமலை வெடித்து சிதறலாம் என அந்நாட்டு புவியியல் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து பர்னி தெலோங் எரிமலையை சுற்றி 05 கி.மீ., சுற்றளவுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 03 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
English Summary
The Mount Burni Telong volcano in Indonesia is showing signs of unrest