'ஹிந்துக்கள் 02-03 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்'; அசாம் முதல்வர் கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமில், முஸ்லிம்கள் எண்ணிக்கை 40 சதவீதத்தை நெருங்கி வருவதாக பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா சமீபத்தில் கூறியிருந்தார்.

இதனால் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஹிந்து தம்பதியர் ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு, மூன்று குழந்தைகளாவது பெற்றெடுக்க வேண்டும் என மாநில ஹிமந்த பிஸ்வ சர்மா வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், மக்கள்தொகை அமைப்பு மாறி வருவது குறித்து, சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளதாவது: 

சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகம் உள்ளதாகவும்,  ஹிந்துக்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். எனவே, ஹிந்துக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதாவது 'ஹிந்துக்கள் ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு குழந்தைகள் பெற்றெடுங்கள். முடிந்தவர்கள் மூன்று குழந்தைகள் கூட பெற்றெடுக்கலாம். முஸ்லிம்கள் ஏழு, எட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர். இப்படியே சென்றால், அசாமில் அவர்களின் மக்கள் தொகை 40 சதவீதத்துக்கு மேல் செல்லும்.' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஹிந்துக்களின் மக்கள்தொகை 35 சதவீதத்துக்கு கீழே செல்வதை எதிர்கால தலைமுறையினர் சந்திக்க நேரிடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், நம் அண்டை நாடான வங்கதேசம், அடிக்கடி வடகிழக்கு இந்தியாவை பிரித்து, தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அவர்களுடன் போர் செய்யத்தேவையில்லை. அவர்களின் மக்கள்தொகை 50 சதவீதத்தை தாண்டினால் தானாகவே அது நடந்துவிடும் என்று கூறியுள்ளார். இந்நிலையில், அசாம் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், முஸ்லிம்களுக்கு 48 சட்டசபை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, அக்கட்சியிடம் கோரிக்கை வைத்தார். அவரை இன்னமும் கட்சியை விட்டு நீக்கவில்லை. ஏனென்றால், முஸ்லிம் ஒட்டுகளை நம்பியே காங்கிரஸ் உள்ளது என்று விமர்சித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Assam Chief Minister urges Hindus to have 2 to 3 children


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->