விமான நிலையத்தில் பரபரப்பு! ரூ.1.14 லட்சம் அபராதத்தில் சிக்கிய நவ்யா நாயர்...1 
                                    
                                    
                                   Commotion airport Navya Nair caught fine of 1point14 lakh
 
                                 
                               
                                
                                      
                                            ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மலையாளிகள் சங்கத்தின் சார்பில் அண்மையில் நடந்த ஓணம் விழாவில் பங்கேற்ற நடிகை நவ்யா நாயர், விமான நிலைய சோதனையில் சிக்கிய சம்பவத்தை பகிர்ந்து பரபரப்பு செய்தி வெளியிட்டார்.

இதுகுறித்து நவ்யா நாயர் தெரிவித்ததாவது, “கொச்சியில் விமானம் ஏறும்போது என் தந்தை எனக்கு கொடுத்த மல்லிகைப்பூவை 2 துண்டுகளாக வைத்திருந்தேன். ஒன்றை தலையில், மற்றொன்றை கைப்பையில்.
அங்கு மல்லிகைப்பூவுக்கு தடை என எனக்கு தெரியாது.சிங்கப்பூரில் தரையிறங்கும்போது இடங்களை மாற்றினேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் விமான நிலைய அதிகாரிகள் என் தலையில் இருந்த மல்லிகைப்பூவை கவனித்தனர். அதற்காக 1980 டாலர் (ரூ.1.14 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பூவுடன் நான் வந்துள்ளேன்" என்று கலகலப்பாக தெரிவித்தார்.ஆஸ்திரேலியாவில் கடுமையான உயிர் பாதுகாப்பு விதிகள் உள்ளதால், வெளிநாடுகளிலிருந்து வரும் தாவரங்கள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்டவை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காமல் இருக்க கட்டுப்பாடுகளில் உள்ளன.
அதில் மல்லிகைப்பூவும் அடங்கும். நடிகை இதனை அறியாமல் தலையில் வைத்திருந்ததால், அபராத நடவடிக்கையில் சிக்கியுள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Commotion airport Navya Nair caught fine of 1point14 lakh