U19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, 18 வருடங்களுக்கு பின்னர், இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றிப் பெற்றுள்ளது. இதன்மூலம் ஆறாவது முறையாக U19 உலக கோப்பையை இந்தியா வென்றுள்ளது. 

இந்திய அணியின் வெற்றிக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதே நேரத்தில், முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் வாழ்த்துகளை  தெரிவித்துள்ளனர்.  

ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது;

"அபாரமான உலகக் கோப்பை பெற்றுள்ள நமது 19 வயதுக்குட்பட்டோர் ஆடவர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!உங்களுடைய நிதானம், அச்சமின்மை மற்றும் உறுதிப்பாடு ஆகியவையே இன்றைய இந்தியாவின் ஜென்-இசட் (Gen Z) தலைமுறையை வரையறுக்கிறது. இந்த ஆறாவது 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை பட்டம், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பறைசாற்றும் ஒரு பெருமிதமான அடையாளம். சிறப்பாக விளையாடினீர்கள், சாம்பியன்களே!" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

அதேபோன்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்திகுறிப்பிட்டுள்ளதாவது:

"ஐசிசி ஆடவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று, நாட்டிற்கு மற்றொரு பெருமைமிக்க தருணத்தை வழங்கிய நமது இந்திய அணிக்கு வாழ்த்துகள். இது திறமை மற்றும் மனவுறுதியின் உண்மையான வெற்றி. இறுதிப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் பிரமிக்க வைக்கும் ஆட்டமும், இந்தத்
தொடர் முழுவதும் அவரது அசாதாரணமான செயல்பாடும் வரும் ஆண்டுகளில் பலராலும் நினைவு கூரப்படும். இந்த இளம் வீரர்கள் எதிர்காலத்தில் இந்திய தேசிய அணிக்காக விளையாடும்போது, இப்போது காட்டும் அதே திறமையுடன் நாட்டுக்காகப் பல வெற்றிகளைப் பெற்றுத் தர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த யு19 உலகக்கோப்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆயுஸ் மாத்ரே கேப்டனாக அணியை வழிநடத்தி தொடர் வெற்றிகளை பெற்று கொடுத்துத்துள்ளார். அத்துடன், இளம்வீரம் வைபவ் சூரிவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். அதே நேரத்தில் இந்த இந்திய U19 அணியில், தமிழ்நாடு வீரர்கள் ஆர்.எஸ். அம்ப்ரீஷ் 03 விக்கெட்டுகளையும், தீபேஷ் தேவேந்திரன் 02 விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi and MK Stalin have congratulated the Indian team for winning the U19 World Cup


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->