வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்; முகமது யூனுஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற போராட்டகாரர்கள்; கண்ணீர்ப்புகை வீசி விரட்டியடித்த போலீசாரால் பரபரப்பு..!
Tension prevailed in Bangladesh as protesters attempted to surround Muhammad Yunus house
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம், வங்கதேசத்தில் ஆட்சி மாணவர் போராட்டத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனையடுத்து அங்கு இடைக்கால அரசின் தலைவராக தற்போது வரை முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பிப்ரவரி 12 ஆம் தேதி அந்நாட்டின் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பாரளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே யூனுஸ் தலைமையில் தற்போதைய இடைக்கால அரசாங்கத்தின் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த டிசம்பரில் மாணவர் அமைப்பு தலைவர் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், இன்று வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸின் இல்லத்தை நோக்கி நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்றுள்ளனர்.
இவ்வாறு போராட்டக்காரர்கள் தடையை மீறி முன்னேற முயன்றபோது, பாதுகாப்புப் படையினர் அவர்களைக் கலைக்கப் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், நீர் பீய்ச்சி அடித்தும் விரட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, முகமது யூனுஸின் இல்லத்தைச் சுற்றியும், டாக்காவின் முக்கியப் பகுதிகளிலும் காவல்துறை மற்றும் ராணுவ பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tension prevailed in Bangladesh as protesters attempted to surround Muhammad Yunus house