'மக்களை ஏளனமாக பேசிய பொன்முடிக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிவிட்டார்.' எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..!
Edappadi Palaniswami said that God had punished Ponmudi for mocking the people
மக்களை அவமதித்து கேலியாக பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிவிட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 126 அடி உயரத்தில் அதிமுகவின் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து இபிஎஸ் பேசும் போது கூறியதாவது:
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சி பயணத்தில் இதுவரை 60 லட்சம் பேரை சந்தித்ததாகவும், அதிமுக ஆட்சியில் புதிய மாவட்டங்களையும் அரசு மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்கினோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனபடி, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததோடு, உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரியையும் கொண்டு வந்தகாக கூறியுள்ளார்.

அத்துடன், இலவச பேருந்து பயணத்தை ஓசி பயணம் என முன்னாள் அமைச்சர் பொன்முடி கேலி செய்தது மக்களை அவமதிக்கும் செயல். இதற்கு ஆண்டவன் தண்டனை வழங்கிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏழை எளிய மக்களை இளக்காரமாக பார்க்கும் கட்சி திமுக தான். அதிமுகவிற்கு ஜாதி மதம் கிடையாது என்று கூறியுள்ளதோடு, ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக எனவும், திமுகவிற்கு மக்கள் வெண்டிலேட்டர் வைத்து விட்டார்கள். 2026 தேர்தலோடு திமுக முடிந்து விடும் என்று மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
English Summary
Edappadi Palaniswami said that God had punished Ponmudi for mocking the people