'திமுகவால் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறிவிட்டது, ஊழல் தலைவிரித்தாடுகிறது'; ஆடிட்டர் குருமூர்த்தி தாக்கு..!
Auditor Gurumurthy says that the political culture in Tamil Nadu has changed under the DMK rule and corruption is rampant
கோவையில் நடந்த இந்தியா டுடே கருத்தரங்கு 2025 இல், 'துக்ளக்' ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது, ' தி.மு.க., வந்தது முதல் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறி விட்டதாகவும், அக்கட்சியில், தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறதாக கூறியுள்ளார்.
அத்துடன், தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது: திராவிடத்துக்கு எந்தவொரு மொழியும் கிடையாது என்றும், தி.மு.க.,வினர் திராவிடம், தமிழ் குறித்து பேசுகின்றனர். ஆனால், இவ்விரண்டுக்குமே திமுகவினர் உண்மையாக இல்லை என்றும், திமுக தமிழை அழிக்க நினைக்கிறதாகவும், இதுவரை தமிழுக்காக எதுவும் செய்யவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறி விட்டதாகவும், அக்கட்சியில், தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு முன்பிருந்த இந்தியாவில் இருந்த தேசியத்தை மீட்டெடுத்தது பா.ஜ தான் என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தும் அதை செய்யவில்லை என்றும், திமுகவுக்கு தேசியத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும், ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் ஆகிய மூன்றையும் முன்னெடுப்பதே பா.ஜ.,வின் உண்மையான நோக்கம் என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
English Summary
Auditor Gurumurthy says that the political culture in Tamil Nadu has changed under the DMK rule and corruption is rampant