மகாத்மா பெயர் நீக்கம் சர்ச்சை: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் தொடரும் போராட்டம்!- செல்வப்பெருந்தகை
Mahatma name removal controversy Congress continues protest against central government Selva Perunthagai
மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி இல்லத் திருமண விழாவில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அரசியல் சூழலைக் குறித்துப் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தினார்.
மகாத்மா காந்தியின் பெயரை நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருந்து நீக்கிய மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கும், வரலாற்றுப் பாரம்பரியத்திற்கும் எதிரானது எனக் கடுமையாக விமர்சித்த அவர், இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் போராட்டங்கள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.

இதே விவகாரத்தில் தி.மு.க. அறிவித்துள்ள போராட்டத்திலும் காங்கிரஸ் பங்கேற்கும் என தெரிவித்தார்.வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணியும் தொகுதி பங்கீடும் தொடர்பாக ஓரிரு நாட்களில் காங்கிரஸ் சார்பில் தனிப் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் தி.மு.க.வுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
கூட்டணி குறித்த முடிவுகளை அகில இந்திய தலைமைத்துவமே எடுக்கும் நிலையில், மாவட்ட மட்ட நிர்வாகிகள் கருத்து தெரிவிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.மேலும், காங்கிரஸ் ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி என்பதால் நிர்வாகிகள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவது தவறல்ல என கூறிய அவர், அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியை சாடினார்.
“ஜெயலலிதா இருந்தால் பா.ஜ.க. தலைவர்கள் இவ்வாறு பேச முடியுமா?” என கேள்வி எழுப்பிய அவர், வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் தி.மு.க.வுடன் இணைந்து பயணிப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று உறுதியாக தெரிவித்தார்.
English Summary
Mahatma name removal controversy Congress continues protest against central government Selva Perunthagai