20 லஞ்ச குற்றச்சாட்டு… 30 ஆண்டு நீதிப்போர்… விடுதலையின் மறுநாளே உயிரிழந்த முன்னாள் போலீஸ்..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்த முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் பாபுபாய் பிரஜாபதி (64) என்பவரின் வாழ்க்கை, ‘நீதிக்காக போராடிய ஒரு சாதாரண மனிதனின் சோக வரலாறு’ என சொல்லக்கூடியதாக மாறியுள்ளது.

1996-ஆம் ஆண்டு ஒரு லாரி ஓட்டுநரிடமிருந்து வெறும் 20 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு 2004-ல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவர், 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறையிலிருந்து வெளியே வந்தபின்பும், ‘நான் நிரபராதி’ என்ற நம்பிக்கையை கைவிடாமல் மேல்முறையீடு செய்தார்.

ஆனால் அந்த மேல்முறையீடு குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆண்டுகள் நீள நிலுவையில் கிடந்ததால், அவரது வாழ்க்கையின் பெரும்பகுதி நீதிமன்ற வாசலில் கழிந்தது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் இறுதியில் அவரை நிரபராதி என அறிவித்து விடுதலை செய்தது.

ஆனால், அந்த நியாயத்தின் ஒளி தெரிந்த மறுநாளே உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி’ என்ற வாசகத்துக்கு பாபுபாயின் வாழ்க்கையே இன்னொரு உயிருள்ள சாட்சியாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 bribery charges 30 year legal battle former policeman died day after his acquittal


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->