சேலத்தில் விஜய் ‘மக்கள் சந்திப்பு’க்கு கிரீன் சிக்னல்… காவலர்கள் நிபந்தனைகளுடன் அனுமதி...! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் அரங்கில் வேகமாக களமிறங்கி வருகிற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மாநிலம் முழுவதும் மக்களை நேரில் சந்திக்கும் தொடர் பிரசாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக சேலத்தில் வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ள “மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சிக்காக கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ. பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரி மனு அளித்தனர்.

முதலில் மகுடஞ்சாவடி மற்றும் சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சீலநாயக்கன்பட்டியில் ஆய்வு மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள், வாகன நிறுத்த வசதி குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி கூடுதல் ஏற்பாடுகள் செய்யவும், அரசாணைப்படி தேவையான ஆவணங்களுடன் மறுமனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினர்.

இதையடுத்து அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பித்த த.வெ.க. நிர்வாகிகளுக்கு, தற்போது நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராசர் மைதானத்தில் பிப்ரவரி 13-ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem Vijay public meeting gets green signal Police grant permission conditions


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->