பாலியல் தொல்லை மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி; நாசிக் டிசிஎஸ் அலுவலக ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


மாகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் கடந்த 2022 ஆண்டு தோட்டம் 2026 அரை காலகட்டத்தில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக எழுந்த புகார் எழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் புகார் தொடர்பாக 09 எஃப்ஐஆர்களை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் 02 பெண்கள் உள்ளிட்ட 07 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நாடியா கான் என்று பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கட்டாய மதமாற்ற புகாரில் வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களிடம் இருந்து நிதி பெறப்பட்டதா என்பன குறித்து விசாரித்து வருவதாக காவல் ஆணையர் சந்தீப் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் டீம் லீடர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் இருந்தவர்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதோடு, அலுவலகத்தில் நமாஸ் செய்யும் படி, கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மனித வள அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைதான 07 பேரையும் டிசிஎஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரச்சினைகள் முடியும் வரை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது. இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TCS employees at the Nashik office instructed to work from home following allegations of sexual harassment and attempted forced religious conversion


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->