300 பத்திரிகையாளர்கள் பணிநீக்கம் அதிர்ச்சி… வாஷிங்டன் போஸ்ட் சிஇஓ ராஜினாமா!
300 journalists laid off causing shock Washington Post CEO resigns
அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க பத்திரிகை நிறுவனங்களில் ஒன்றான வாஷிங்டன் போஸ்ட், நிதி நெருக்கடியை சமாளிக்க கடுமையான சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த புதன்கிழமை ஒரே அடியாக சுமார் 300 பத்திரிகையாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த ஆட்குறைப்பில், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மகன் மற்றும் சர்வதேச விவகாரங்களை எழுதியுவரும் பத்திரிகையாளர் இஷான் தரூரும் இடம்பெற்றது கவனம் ஈர்த்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்குள், நிறுவனத்தின் பதிப்பாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) வில் லூயிஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆட்குறைப்பு முடிவுகள் மற்றும் நிறுவனத்தை கையாளும் அவரது செயல்முறை குறித்து ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பிய நிலையில், வெறும் 15 மாதங்களே பதவியில் இருந்த லூயிஸ் விலகுவது நிறுவனத்தின் உள்கட்டமைப்பில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“வாஷிங்டன் போஸ்டின் நிலையான எதிர்காலத்தை பாதுகாக்கவே இந்த கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன” என்று தனது பிரியாவிடை குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நிறுவனத்தின் நிதி அதிகாரி ஜெஃப் டி’ஒனோப்ரியோ தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்று, சவாலான கட்டத்தை சமாளிக்க தயாராகியுள்ளார்.
பத்திரிகை உலகையே உலுக்கிய இந்த மாற்றங்கள், வாஷிங்டன் போஸ்டின் எதிர்கால திசையைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
English Summary
300 journalists laid off causing shock Washington Post CEO resigns