விசில் கூட அனுமதி இல்லை… டி20 உலகக் கோப்பையில் சேப்பாக்கம் மைதானத்தில் கடும் பாதுகாப்பு விதிகள்...!
Even whistles not allowed Strict security rules Chepauk stadium T20 World Cup
2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா–இலங்கை இணைந்து நடத்தும் மாபெரும் சர்வதேச கொண்டாட்டமாக களைகட்டிக் கொண்டிருக்கிறது.
20 அணிகள் மோதும் இந்தத் தொடரின் 4வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சென்னையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த போட்டியில் இறங்கின. போட்டியை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட நிலையில், மைதானத்துக்குள் கொண்டு செல்லப்படும் பொருட்கள் குறித்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், டிரோன், லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை அமலில் இருந்த நிலையில், தற்போது ரசிகர்களின் உற்சாக சின்னமாகக் கருதப்படும் “விசில்” கூட அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி அல்லது பிசிசிஐ தரப்பில் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ விதிமுறையும் இல்லாவிட்டாலும், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை கருத்தில் கொண்டு உள்ளூர் கிரிக்கெட் வாரியம், காவல்துறை மற்றும் மைதான நிர்வாகம் இணைந்து இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ‘விசில் சத்தமின்றி’ சேப்பாக்கம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
English Summary
Even whistles not allowed Strict security rules Chepauk stadium T20 World Cup