திரிஷா தான் என் "லக்கி சார்ம்"! கேர்ள்ஸ் ட்ரிப் பற்றி ஓபனாக போட்டுடைத்த அர்ச்சனா கல்பாத்தி! - Seithipunal
Seithipunal


நடிகை திரிஷா, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் தொடர்ந்து திகழ்ந்து வருகிறார். 42 வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அவர், தற்போது கோலிவுட்டின் "லக்கி ஹீரோயின்" என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

சமீபத்தில் வெளியான "கருப்பு" திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய இந்தப் படத்தில் திரிஷாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. கதைக்கு ஏற்ற இயல்பான நடிப்பையும், இளமையான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் அதிக வசூல் செய்த படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை என்ற பெருமையும் தற்போது திரிஷாவுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவலை அவர் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பதிவிலும் பகிர்ந்திருந்தார்.

திரிஷாவுக்கு சினிமா துறையில் நெருங்கிய நண்பர்கள் பலர் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. இருவரும் நீண்ட காலமாக நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அர்ச்சனா கல்பாத்தி, திரிஷா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில்,"திரிஷாதான் எப்போதும் என்னுடைய லக்கி சார்ம். நாங்கள் பல வருடங்களாக மிகவும் நெருங்கிய தோழிகளாக இருக்கிறோம். அவர் என்னுடைய ஃபேவரைட். எங்களுக்கென்று ஒரு பெண்கள் குழு இருக்கிறது. சமீபத்தில் அனைவரும் சேர்ந்து மொராக்கோ சுற்றுலா சென்றோம். அது என் பிறந்தநாளை முன்னிட்டு திட்டமிடப்பட்ட பயணம்."

மேலும்,"எங்கள் குழுவில் யாராவது ட்ரிப் திட்டமிட்டால், கடைசி நேரத்தில் வேலை காரணமாக அதை மாற்றச் சொல்வது பெரும்பாலும் நான்தான். தயாரிப்பு பணிகள் காரணமாக திடீரென வேலைகள் வந்துவிடும். ஆனால் அதை திரிஷா உள்ளிட்ட நண்பர்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள்" என்று தெரிவித்தார்.

திரிஷா மற்றும் அர்ச்சனா கல்பாத்தியின் நட்பு, சினிமாவைத் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொடரும் வலுவான உறவாக இருப்பதை இந்தப் பேட்டி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trisha is my lucky charm Archana Kalpathi opens up about her girls trip


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->