'எனக்கு Z-பிரிவு பாதுகாப்பு வேண்டாம்'...! - மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அண்ணாமலை எழுதிய அதிரடி கடிதம்...! - பின்னணி என்ன...? - Seithipunal
Seithipunal


பா.ஜ.க.விலிருந்து விலகி புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை, வரவிருக்கும் தேர்தல் களத்தில் நேரடியாக களமிறங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அவரது புதிய இயக்கத்திற்கு மக்களிடையே கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சூழலில், தனக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மாநில அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டுமே போதுமானதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை அனுப்பப்பட்ட இந்த கோரிக்கை கடிதம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் முடிவு எடுக்கக்கூடும் என்றும், ஒப்புதல் கிடைத்தவுடன் இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

பா.ஜ.க. மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த காலகட்டத்திலிருந்தே அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

i dont want Z category security Annamalai dramatic letter Union Home Ministry What background


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->