நம்பிக்கையோடு வந்தவங்களுக்கு என் நன்றி...! - அரசியல் புயலுக்கு நடுவே அண்ணாமலை வெளியிட்ட உருக்கமான அறிக்கை...!
My thanks those who came hope Annamalai heartfelt statement amidst political storm
வி தி லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இயக்கத்தில் உறுப்பினர்களாக இணைந்து அளித்துள்ள அபாரமான ஆதரவு, அளவிட முடியாத மகிழ்ச்சியையும், அதைவிட உயர்ந்த பொறுப்புணர்வையும் எனக்குள் ஏற்படுத்தியுள்ளது.

இந்த இயக்கத்தின் நோக்கத்தையும், எதிர்காலக் கனவுகளையும் நம்பி கைகோர்த்துள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரே ஒருவரின் முயற்சி அல்ல; மாற்றத்தை விரும்பும் மக்களின் கூட்டுப்பயணமாகும்.தமிழகத்தில் நேர்மையான மாற்றம் மலர வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்பும், இந்த பேராதரவின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காக்கும் வகையில், நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் பொது நல எண்ணத்துடன் இந்தப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம்.
தமிழகத்தின் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் இந்த மக்கள் இயக்கத்தில் தொடர்ந்து பங்கெடுத்து, மாற்றத்தின் சக்தியாக திகழுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்".இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
My thanks those who came hope Annamalai heartfelt statement amidst political storm