இந்தியாவே உன்னால் பெருமை கொள்கிறது...! - உலகை வென்ற பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி நெஞ்சார வாழ்த்து...!
India proud you Prime Minister Modi congratulates Praggnanandha winning world
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் நடைபெற்ற 14-வது நார்வே சர்வதேச செஸ் தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் முன்னணி வீரரான வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய அவர், நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்பை தனதாக்கினார்.

உலக செஸ் அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ள இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இந்த நிலையில், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"இந்த மகத்தான வெற்றிக்காக பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
அவரது விடாமுயற்சி, திறமை மற்றும் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க சாதனையாக இது திகழ்கிறது.
சர்வதேச செஸ் உலகில் புதிய உச்சங்களை நோக்கி பயணிக்கும் பிரக்ஞானந்தா, எதிர்காலத்திலும் மேலும் பல வெற்றிகளை குவித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
அவரது அனைத்து முயற்சிகளும் சிறப்புடன் அமைய எனது நல்வாழ்த்துகள்."இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
India proud you Prime Minister Modi congratulates Praggnanandha winning world