25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘லகான்’.. புதிய டிரெய்லர் வெளியீடு! - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்த கல்ட் கிளாசிக் திரைப்படமான ‘லகான்’ வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய டிரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமீர் கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜூன் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ‘லகான்’ சிறப்பு திரையிடலாக மீண்டும் ரசிகர்களுக்காக திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. படத்தின் 25-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த சிறப்பு வெளியீடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய டிரெய்லர், பிரிட்டிஷ் ஆட்சிக் கால இந்திய கிராமப்புற வாழ்க்கையை மீண்டும் நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள், நட்பு, காதல், ஒற்றுமை, தைரியம் மற்றும் வெற்றிக்கான போராட்டம் போன்ற அம்சங்களை மீண்டும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

2001-ஆம் ஆண்டு வெளியான ‘லகான்: ஒன்ஸ் அபான் எ டைம் இன் இந்தியா’ திரைப்படத்தை ஆஷுதோஷ் கௌரிகர் இயக்கியிருந்தார். அமீர் கான் தயாரித்து நடித்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

1893-ஆம் ஆண்டு காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவான இப்படத்தில், கடுமையான வரி சுமையால் அவதிப்படும் கிராம மக்கள், பிரிட்டிஷ் அதிகாரிகள் விடுக்கும் கிரிக்கெட் சவாலை ஏற்று போராடும் கதை சொல்லப்பட்டுள்ளது. வெற்றி பெற்றால் வரி ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையுடன் நடைபெறும் அந்தப் போட்டியே படத்தின் மையக்கருவாக அமைந்தது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை, படத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. உலகளாவிய அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்திய படங்களில் ஒன்றாகும்.

மேலும், தேசிய திரைப்பட விருதுகளில் எட்டு விருதுகளை வென்ற ‘லகான்’, இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் நினைவுகூரப்படுகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த படம், பழைய ரசிகர்களுக்கும் புதிய தலைமுறையினருக்கும் சிறப்பான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lagaan to return to screens after 25 years New trailer released


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->