திருப்பத்தூரில் பயங்கரம்...! நிதி நிறுவன அதிபர் வீட்டிற்குள் நுழைந்து ரூ.50 லட்சம் நகைகள் சுருட்டல்... - Seithipunal
Seithipunal


திருப்பத்தூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர்கள், பீரோவை திறந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 50 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவலர்கள், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (52).

நிதி நிறுவனம் நடத்தி வரும் இவரது மனைவி கவிதா, நேற்று காலை வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, பீரோவை திறந்து 50 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் நூதன முறையில் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் அப்பகுதியில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Financial institution president house entered and jewellery worth 50 lakhs stolen


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->