''எம்ஜிஆர், ஜெயலலிதா சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்; தீர்ப்பை நீங்களே கொடுக்க வேண்டும்''; எடப்பாடி பழனிசாமி .வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


''அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்கள் நியாயம் கேட்கிறோம். அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்களிடம் நியாயம் கேட்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.'' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது. நான் உங்களில் ஒருவன். உங்கள் ஊரில், தெருவில், வீட்டில், நீங்கள் தினசரி சாதாரணமாக பாக்கும் அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.

னக்கு நமது மக்கள் படும் கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நமது பிரச்சினைகளை தெரியும். ஆனா எனக்கு அடுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குவது போல, போலி வசனங்கள் பேசத் தெரியாது.

ஏனென்றால், நான் கீழே இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிராக, அத்தனை சூழ்ச்சிகள். எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும் என்று சொன்ன, ஜெயலலிதாவின் சின்னம், இந்த இரட்டை இலை.

இதை காப்பாற்ற நினைத்தது நம்முடைய தவறா? இல்லை, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னுடைய தவறா? புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது என்று, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்? எத்தனை சூழ்ச்சிகள்? எத்தனை துரோகங்கள்? இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்? இன்று இந்த இரட்டை இலையை விமர்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம் கரூர் விவகாரத்தில் நல்லதுதானே நினைத்தோம்?

அதுதான் நாம் செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாகத்தான் நமது எம்எல்ஏக்களை பேரம்பேசி திருடிக்கொண்டு போக பார்க்கிறார்களா? உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பற்றியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தால்கூட, இப்படி செய்ய மனது வந்திருக்குமா?

அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்கள் நியாயம் கேட்கிறோம். அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்களிடம் நியாயம் கேட்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.

இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கப்போகும் தீர்ப்பு, இனி எம்எல்ஏக்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் தவெகவுக்கும், விலை போக நினைத்த துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்’.'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami appeals stating that they are seeking justice from you on behalf of MGR and Jayalalithaa


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->