ஆடுதுறை – கும்பகோணம் – சுந்தரபெருமாள் கோவில் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக்க ஒப்புதல்; மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள எல். முருகன்..! - Seithipunal
Seithipunal


ஆடுதுறை – கும்பகோணம் – சுந்தரபெருமாள் கோவில் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன்,  பிரதமருக்கும், ரயில்வே அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''தமிழ்நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான எனது கோரிக்கையை ஏற்று, ஆடுதுறை – கும்பகோணம் – சுந்தரபெருமாள் கோவில் இடையிலான ஒற்றை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்றும் பணிக்கு ஒப்புதல் அளித்தமைக்காக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இரட்டை ரயில் பாதைத் திட்டம், இப்பகுதி மக்களின் பயண வசதியை மேம்படுத்துவதுடன், ரயில் போக்குவரத்துத் திறனையும், பிராந்திய இணைப்பையும் மேலும் வலுப்படுத்தும்.'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

L Murugan thanks the Central Government for approving the conversion of the single track into a double railway line


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->