தவறு செய்தா தப்ப முடியாது...! கோனியம்மன் கோவிலில் அரங்கேறிய முறைகேடு...? - ஒரே உத்தரவில் தூக்கப்பட்ட 8 பேர்
Koniamman temple 8 people removed single order
கோவை கோனியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணியின் போது, அங்கிருந்த ஊழியர்கள் ஒரு உண்டியலை திருடி, அதிலிருந்த பணத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 4 ஊழியர்களும், உண்டியல் திருடப்பட்டதை கண்டறியாமல் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் தெரிவிக்கப்படும் 4 அதிகாரிகளும் அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்து, கோனியம்மன் கோவிலில் பணியாற்றி வந்த பாலசுப்ரமணியன், சரவணன், பிரதீப் குமார், கிருஷ்ணராஜ் ஆகிய 4 ஊழியர்களும், சம்பவத்தை உரிய முறையில் கண்காணிக்கத் தவறியதாகக் கூறப்படும் ராம்குமார், உதயகுமார், குமார், உஷா நந்தினி ஆகிய 4 அதிகாரிகளும் என மொத்தம் 8 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Koniamman temple 8 people removed single order