நடைபயிற்சி செல்பவர்களே உஷார்...! பின்னாலிருந்து கல்லால் தாக்கி போன் பறிப்பு... அலறவிட்ட வாலிபரை மடக்கிப் பிடித்த காவல்துறை...!
Attacked from behind stone and snatched phone police caught screaming youth
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே, அதிகாலை நேரத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த நபரை வழிமறித்து கல்லால் தாக்கியதுடன், அவரது செல்போனை பறித்துச் சென்றதாகக் கூறப்படும் சரித்திரப் பதிவேடு குற்றவாளியை காவலர்கள் கைது செய்தனர்.ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்குளம்-சிவகளை சாலையில் கடந்த 23-ம் தேதி ஒருவர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவரை வழிமறித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.பின்னர், அந்த நபரை கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகவும், தொடர்ந்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில், ஏரல் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.இந்த விசாரணையின் போது, ஏரல் பகுதியைச் சேர்ந்த முப்பிலிமாடன் மகன் ராஜூ என்கிற ராஜபாண்டி (32) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், அவர் ஏற்கனவே காவல்துறையின் சரித்திரப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளவர் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து ராஜபாண்டியை கைது செய்த காவலர்கள், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Attacked from behind stone and snatched phone police caught screaming youth