சொன்னதை செய்தார்கள் சிங்கப்பெண்கள்...!ஒரே வாரத்தில் 346 புகார்களுக்கு உடனடி தீர்வு கண்டு அசத்தல்....!
singappen team did what they were told It amazing that they found immediate solutions 346 complaints single week
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது, சமூகத்தின் பங்களிப்புடன் காவல் பணிகளை முன்னெடுப்பது மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் இந்த சிறப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் மூலம் ஒரே வாரத்தில் 346 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும், 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், காணாமல் போன 14 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே காலகட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களில் 3,580 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய 51 குழந்தைகள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் முயற்சியால் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், புகார்களுக்கு விரைவான தீர்வு, காணாமல் போனவர்களை மீட்பது மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவது என சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
singappen team did what they were told It amazing that they found immediate solutions 346 complaints single week