விஜய் போல் முதல்வர் பதவிக்கு அவசரப்படல...! - சரத்குமாரைப் புகழ்ந்து சீமானுக்கு மேடையில் அழைப்பு விடுத்த நயினார் நாகேந்திரன்....! - Seithipunal
Seithipunal


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினருமான நடிகர் சரத்குமாரின் பிறந்த நாள் விழா, அகில இந்திய சரத்குமார் ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் நாட்டாமை குடும்பத்தினர் சார்பில் நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரில் நடைபெற்றது.விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விழா மேடையில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தங்கள் கூட்டணியில் இணையுமாறு நேரடியாக அழைப்பு விடுத்தார்.அவர் பேசுகையில், “சரத்குமாருக்கு 72 வயதாகி இருந்தாலும், அவரது எண்ணங்களிலும் செயல்பாடுகளிலும் அவர் இன்னும் 27 வயது இளைஞரைப் போன்ற சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இந்த மேடையில் சீமான் உள்ளிட்ட அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.இதேபோன்ற ஒரு மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால், தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்கலாம். இனி தமிழக அரசியல் களம் எந்த திசையில் பயணிக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.சிலர் அரசியலுக்கு வந்தவுடனேயே முதல்-அமைச்சர் பதவியை நோக்கி செல்கின்றனர்.

ஆனால், முதல்-அமைச்சர் பதவிக்குத் தேவையான அனைத்து தகுதிகளும் சரத்குமாரிடம் உள்ளன. தேசிய உணர்வுடன் தனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்துக் கொண்டுள்ள அவரை பதவி நிச்சயம் தேடி வரும்” என்றார்.தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் காலியாகியுள்ள 6 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த தொகுதிகளில் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் சீமான் பொதுவேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், இடைத்தேர்தலில் சீமானுக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விழாவில் பா.ஜ.க. மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் நடிகர் சரத்குமார் பேசுகையில், “நான் திரைத்துறையில் இருந்து திடீரென அரசியலுக்கு வந்தவன் அல்ல. எனது குடும்பத்திற்கே அரசியல் பின்னணி உள்ளது.

உண்மையுடனும் நேர்மையுடனும் தொடர்ந்து உழைப்பவர்களை யாராலும் நிரந்தரமாக தோற்கடிக்க முடியாது.இளைஞர்கள் வாழ்க்கையில் சாதிக்க உடல் வலிமையும், கடின உழைப்பும் அவசியம். எந்த இலக்கையும் அடைய மன வலிமையும் உடல் வலிமையும் ஒன்றாக இருக்க வேண்டும்.

நான் 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று நம்புகிறேன். நீண்ட ஆயுளுக்கு உடலையும் மனதையும் வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.சீமான் இந்த மண்ணில் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது காலத்தின் கட்டாயமாக இருக்கும். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்” என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont rush Chief Minister post Vijay Nainar Nagendran praised Sarathkumar and invited Seeman stage


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->