PF பணத்தில் பிரச்சினையா...? நேரடியா போங்க... உடனே தீர்வு உண்டு...! - சென்னையில் நாளை நடக்கும் 'உங்கள் அருகில் பி.எப்.' முகாம்...!
Is thereproblem PF money Go directly There solution right away PF near you camp held Chennai tomorrow
சென்னை அண்ணா சாலையில் உள்ள மவுண்ட் ரோடு பிலாலில் நாளை நடைபெற உள்ள ‘உங்கள் அருகில் பி.எப்.’ முகாமில், பணியாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தகவல் வைப்பு நிதி மண்டல ஆணையர் ரேணு ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,"பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில், சந்தாதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் ‘உங்கள் அருகில் பி.எப்.’ என்ற பெயரில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மவுண்ட் ரோடு பிலாலில் நாளை (திங்கட்கிழமை) சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
இதுவரை தீர்வு காணப்படாத குறைகள் மற்றும் பிரச்சினைகளை கொண்டுள்ள பி.எப். சந்தாதாரர்கள் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் உரிய ஆவணங்களுடன் முகாமில் நேரில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.
English Summary
Is thereproblem PF money Go directly There solution right away PF near you camp held Chennai tomorrow