ஜி.வி. பிரகாஷ் படத்தில் மர்ம சம்பவம்...? ‘பிளாக் மெயில்’ ஸ்னீக் பீக்கில் அசாதாரண காட்சி...!
Mysterious incident in GVPrakashs film An unusual scene Black Mail sneak peek
கிங்ஸ்டன் படம் மூலம் கலவையான விமர்சனத்தை பெற்ற ஜி.வி. பிரகாஷ், புதிய படமாக 'பிளாக் மெயில்' படம் மூலம் திரும்பியுள்ளார்.இந்த படத்தை மு.மாறன் இயக்கியுள்ளார், இவர் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ போன்ற அதிரடி திரில்லர்கள் மூலம் பிரபலமாகியவர்.

மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி, முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், மற்றும் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ஹரி பிரியா போன்றோர் நடித்துள்ளனர்.
இதில் இசையை டி.இமான், தொகுப்பை சான் லோகேஷ் கவனித்துள்ளனர். இதைத்தொடர்ந்து படக்குழு தற்போது வெளியிட்ட ஸ்னீக் பீக் காட்சிகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், உற்சாகத்தையும் சேர்த்துள்ளது.
இப்படம் வருகிற செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் பெரும் அதிரடியாக வெளியாக இருக்கிறது.
English Summary
Mysterious incident in GVPrakashs film An unusual scene Black Mail sneak peek