தீவிர சிகிச்சை பிரிவில் அ.தி.மு.க. சேரும் நாள் தூரமல்ல..! உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சையில்...! - Seithipunal
Seithipunal


சென்னை சைதாப்பேட்டையில் ரூ.28.75 கோடி செலவில் புதிய மருத்துவமனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்த மருத்துவமனை தரை மற்றும் ஆறு தளங்களுடன், நவீன மருத்துவ வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மேலும்,  விழாவில் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், துணை மேயர் மு. மகேஷ் குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது,"கல்வியும் சுகாதாரமும் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். மக்களுக்கு மருத்துவ சேவைகள் வீடு தேடி செல்ல வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் சிறப்பாக செயல்பட்டு, ஐ.நா. சபையின் விருதும் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது.

மேலும், சுகாதாரத்துறையில் தமிழ்நாடு இந்தியாவுக்கு வழிகாட்டி வருகிறது' என்று தெரிவித்தார்.மேலும் அவர்," எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தை குறித்தும், 10 நாள் முன்பு பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது அங்கு வந்திருந்த ஆம்புலன்ஸ் வண்டியை நுழையவிடாமல் என்னெல்லாம் தடங்கள் செய்ய முடியுமோ அதை செய்து கொண்டு இருந்தார்கள்.

விரைவில் அ.தி.மு.க. ஆம்புலன்சில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் அ.தி.மு.க.வை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் நிலைமை ஏற்படும். எடப்பாடி பழனிசாமியையும் காப்பாற்றும் பொறுப்பை முதலமைச்சர்தான் செய்வார்"என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்தும், விருகம்பாக்கம் கால்வாயை ரூ.30 கோடி செலவில் மேம்படுத்தும் திட்டத்தை துணை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

day when AIADMK admitted intensive care unit not far off Udhayanidhi Stalins speech in controversy


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->