தமிழ் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம்...! ஹாலிவுட் படத்தில் வித்யுத் ஜம்வால் நடிப்பு உறுதி..!
Interesting news for Tamil fans Vidyut Jamwal confirmed to star in Hollywood film
பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால், தமிழில் துப்பாக்கி, அஞ்சான், மதராஸி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது ஹாலிவுட் ஆக்ஷன் படம் 'ஸ்ட்ரீட் பைட்டர்–இல் தால்சிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி முன்பு வெளியானது.

அந்தப் படத்தில் நோவா சென்டினியோ, ஆண்ட்ரு கோஜி, ஜேசன் மோமோவா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மேலும் கேப்காமின் பிரபல வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டதே இந்த படம்.
இந்நிலையில், ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் பாரமவுண்ட் பிக்சர்ஸ் இதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி,“ரகசியங்கள் நீண்ட நாள் நீடிக்காது… ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ தற்போது தயாரிப்பில் உள்ளது.
படம் 2026 அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும்” என்று அறிவித்ததுடன், நடிகர் பட்டியலையும் தற்போது வெளியிட்டுள்ளது.
English Summary
Interesting news for Tamil fans Vidyut Jamwal confirmed to star in Hollywood film