ஏமாற்றிய காதலனை  சூட்கேசிஸ் அடைத்து கொலை செய்த காதலி! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் தன்னை எமற்றைய காதலனை சூட்கேசிஸ் அடைத்து வைத்து கொன்ற வழக்கில், 2 வருடங்களுக்கு பின் இளம்பெண் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, அமெரிக்கா நாட்டின, புளோரிடாவின் வின்டர் பூங்கா பகுதியில் வசித்து வந்த சாரா என்ற இளம்பெண்ணின் வீட்டில், அவரின் காதலன் பெட்டிக்குள் மூச்சற்று இறந்து கிடந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்போது போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், சாரா, தனது காதலன் ஜார்ஜ் டோரஸை பெட்டிக்குள் வைத்து அடைப்பதும், அப்போது அவர் மூச்சு விட சிரமமாக இருக்கிறது என்று கதறுவதும் பதிவாகியுள்ளது. 

அந்த சமயத்தில், "நீ எனக்கு செய்ததற்கு இது உனக்கு தேவை தான். என்னை நீ ஏமாற்றும் போதும் இப்படி தான் இருந்தது. இப்போது நீ அதை நன்றாக அனுபவி" என்று அதற்கு சாரா பதிலளித்துவிட்டு தூங்கி விடுகிறார்.

இதனை சாட்சியமாக வைத்துக்கொண்டு, காதலனை பெட்டிக்குள் அடைத்து கொலை செய்ததாக சாரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

USA Love Issue Murder case


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->