உடல்நிலை குறித்த வதந்திக்கு மத்தியில் கிரிமியா பாலத்தை பார்வையிட்ட அதிபர் புதின்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்யா கிரீமியாவை இணைக்கும் பாலத்தின் மீது அக்டோபர் 8ஆம் தேதி உக்ரைனால் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து குண்டு வெடிப்பில் சேதமடைந்த கிரீமியா பாலத்தை சீரமைக்கும் பணி முடிந்து திறக்கப்பட்டது.

இந்நிலையில் அதிபர் புதின், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்தபோது மாடி படிக்கட்டில் தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 

ஆனால் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புடின் குண்டு வெடிப்பில் சேதம் அடைந்த கிரீமியா பாலத்தை சீரமைக்கும் பணி முடிந்து திறக்கப்பட்டுள்ள பாலத்தை பு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மேலும் அவர் பாலத்தில் காரை ஓட்டி சென்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Putin visited the Crimea bridge amid rumours about his health


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->