குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்!
plane crash Death USA
அமெரிக்கா, கலிபோர்னியாவின் சிமி பள்ளத்தாக்கில் உள்ள வுட்ராஞ்சல் பகுதியில் இன்று அதிகாலை ஒரு சிறிய ரக விமானம் நடுவானில் பறந்தபடியே திடீரென கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்தது.
விபத்தில் விமானம் மோதியதும் அதில் தீப்பிடித்து முழுமையாக எரிந்தது. விமானத்தில் ஒரே ஒருவர் மட்டும் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர், விமானி என அடையாளம் காணப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
அருகிலுள்ள வீடுகளில் வசித்து வந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதனால் அவர்கள் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்பது சுகாதாரத்துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக அமெரிக்க விமானப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.