நீட் தேர்வு வினா தாள் கசிவு! ரூ.40 லட்சம் மோசடி... சிக்கிய மூவர்!
Neet exam Malpractice question paper leak
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த தேர்வில் வினாத்தாள் முறைகேடு சம்பவம் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில், நீட் வினாத்தாள் வழங்குவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ய முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பால்வான் (27), முகேஷ் மீனா (40) மற்றும் ஹர்தாஸ் (38) என போலீசார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை, இந்த மூவரும் ஒரு மாணவனையும் அவரது குடும்பத்தையும் குருகிராமுக்கு அழைத்துச் சென்று, வினாத்தாள் வாங்க ரூ.40 லட்சம் தேவைப்படுமென கூறியுள்ளனர். மாணவனின் குடும்பத்தினர் சந்தேகத்துடன் வினாத்தாளை காண்பிக்குமாறு கேட்டபோது, மூவரும் தவிர்த்துள்ளனர்.
இதையடுத்து, மாணவனின் குடும்பம் உடனடியாக போலீசில் புகார் செய்தது. விசாரணையில், இவர்கள் வினாத்தாள் வழங்குவதாக பொய் கூறி பணம் பறிக்க திட்டமிட்டது தெரியவந்தது. தொடர்ந்து மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக கல்வி Mahimai குழுக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றன.
English Summary
Neet exam Malpractice question paper leak