நாசவேலை செய்த சதி திட்டம் தீட்டிய இலங்கை துாதரக அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்ப்பு: பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக தகவல்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டிய வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த, இலங்கை துாதரக அதிகாரி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த அமீர் சுபைர் சித்திக், 51 வயது. இவர், இலங்கையில் செயல்படும் பாகிஸ்தான் துாதரகத்தில் விசா பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர். இவர் கடந்த 2012 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில், நம் நாட்டில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி, தமிழகத்தில் பாகிஸ்தானின் உளவாளிகளை நியமித்து வேவு பார்த்து வந்துள்ளார். இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இந்த வழக்கு தொடர்பாக, சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், அமீர் சுபைர் சித்திக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 15-ஆம் தேதி காலை, 10:30 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது; ஆனால், அமீர் சுபைர் சித்திக் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Consular officer who plotted sabotage fails to appear in court


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->