'2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்': வைகோ உறுதி..! - Seithipunal
Seithipunal


வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று  ஆட்சி அமைக்கும் என  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ (எம்.பி.) மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

இங்கு உரையாற்றிய வைகோ கூறியதாவது: மனிதர்கள் வருவார்கள், சிலர் விலகிச் செல்வார்கள், ஆனால், என் பயணம் நிற்காது. என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்தது இல்லை, இனியும் விமர்சிக்க மாட்டேன். உங்களையும் என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திராவிட இயக்கத்தை வேரோடு பிடுங்கி எறிவோம் என அமித் ஷா கூறுவது பகல் கனவு என்று தெரிவித்துள்ளார். அதாவது, கடலை குடித்து விடுவேன் என்று கூறுவது போல் அமித்-ஷா பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், பதவி பறிப்பு மசோதாவை கட்சி பேதமின்றி அனைவரும் எதிர்க்க வேண்டும் எனவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டார் என்று கூறியுள்ளார்.

அத்துடன், முதல்வர் சொல்லாதவற்றையும் நிறைவேற்றுகிறார் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு, குறுக்கே சுவர் எழுப்பி தடை செய்யும் ஒன்றிய அரசுதான் காரணம் என்றும் பேசியுள்ளார். 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaiko confident that DMK will win the 2026 assembly elections with a landslide majority


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->