'அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது: ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக ஆட்சியை காப்பாற்றியதே பாஜகதான்': எடப்பாடி பழனிசாமி..! - Seithipunal
Seithipunal


பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அதிமுக பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: அதிமுகவை சிலர் அழிக்க பார்த்தார்கள். அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானமே முக்கியம். எவர் ஒருவர் துரோகம் செய்தாலும் அவர் நடுரோட்டில்தான் நிற்பார் என்று பேசியுள்ளார்.

அத்துடன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப்பின் அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், அதிமுகவை உடைக்க வேண்டும் என செயல்பட்டவரை மன்னித்து துணை முதல்வர் பதவி வழங்கியதாகவும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை கவிழ்த்து கபளிகரம் செய்ய பார்த்தவர்களிடம் இருந்து காப்பாற்றியது பாஜகதான் எனவும் அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami said that the BJP was the one who saved the AIADMK government after Jayalalithaas death


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->