சோக செய்தி! பிரேசில் நாட்டை சேர்ந்த மிக வயதான 'கானபரோ லூகாஸ்' மறைந்தார்...! - Seithipunal
Seithipunal


உலகின் மிக வயதான பெண்ணாக அறியப்பட்ட 'கானபரோ லூகாஸ்' காலமானார். கானபரோ என்ற பெண்மணி ஜூன் 8, 1908 அன்று பிரேசிலின் 'ரியோ கிராண்டே டோ' சுலில் பிறந்தார்.

இவர் 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டு கானபரோ வாழ்ந்து வந்தார்.மேலும் இவர்,வயது முதிர்வு காரணமாக கேசெரோஸிலுள்ள சாண்டா காசா டி மிசரிகார்டியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று முன் தினம் (ஏப்ரல் 30) உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தகவல் தெரிவித்தனர்.மேலும், அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது உயிரிழப்பு பலருக்கும் வேதனை அளிக்கிறது. இதில், கானபரோ லூகாஸின் மரணத்துக்கு பின், இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர் இப்போது உலகின் வயதான பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

oldest woman Brazil Canabero Lucas has passed away


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->