யூதர்களை கதறவிட்ட ஹமாஸ்! பின்னணியில் இவர்களா? வெளியான அதிர்ச்சி தகவல்!!
Info Hamas using Russian Chinese weapons
கடந்த வாரம் இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை நடத்திய ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியர்கள் பலரை சிறை பிடித்து சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் அதிகப்படியான உயிர் சேதம் ஏற்பட்டதால் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்தன. மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திடுமோ என உலக நாடுகள் உற்று நோக்கியது.

இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முன் வர வேண்டும் என பாலஸ்தீனம் அழைப்பு விடுத்தது. பலம் வாய்ந்த இஸ்ரேலை எதிர்த்து தாக்குதல் நடத்தும் ஹமாஸ் அமைப்பிற்கு ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன என்ற கேள்வி முதலில் எழுகிறது.
ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும்போது எந்த மாதிரியான ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டும் என முன்பே திட்டமிட்டு ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை குவித்துள்ளது.

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள், மாற்றி அமைக்கப்பட்ட ஏகே 47 ரகத் துப்பாக்கிகள், பல ஆண்டுகள் பழமை வாய்ந்த சோவியத் யூனியன் இயந்திரத்துப்பாக்கிகள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தான் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் ரஷ்யா மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட வகைகளாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் அனைத்தும் ஈரான் நாட்டில் இருந்து வாங்கப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலிடம் இருக்கும் ஆயுதங்களை விட சக்தி குறைவாக இருந்தாலும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஹமாஸ் அமைப்பு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Info Hamas using Russian Chinese weapons