தீப்பற்றி எறிந்த இல்லம்.. 8 குழந்தைகள் உட்பட 13 பேர் உடல்கருகி பலியான சோகம்..!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் அரங்கேறும் பல்வேறு விபத்துகளில் சிக்கி பலரும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில்., ஜோர்டான் நாட்டில் அரங்கேறிய விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோர்டான் நாட்டில் இருக்கும் விவசாய நிலங்களில் இருக்கும் பணியாளர்களாக சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் நாட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நாட்டின் தலைநகர் அம்மான் நகர் பகுதியில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் ஷெனே கிராமம் உள்ளது. 

இந்த கிராமத்தில் இருக்கும் பண்ணையில் 2 பாகிஸ்தானியர்கள் தங்களின் குடும்பத்தாருடன் தகர இல்லத்தில் வசித்து வந்த நிலையில்., இவர்கள் வசித்து வந்த தகர வீடானது இன்று அதிகாலை 2 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. 

died, murder, killed, suicide attempt,

இந்த விபத்தில் சுமார் 8 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான நிலையில்., மேலும் 3 பேர் படுகாயமடைந்து உயிருக்காக அலறித்துடித்தனர். 

இதனைத்தொடர்ந்து தகவலை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Jordan city house fire accident peoples died


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal