அப்பா விஜய் போலவே டான்ஸ்..சிக்மா படத்தில் நடமாடிய ஜேசன் சஞ்சய்! சிக்மா படத்தின் புதிய அப்டேட்! - Seithipunal
Seithipunal


நடிகரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள சிறிய புரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, இந்த வீடியோவில் நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லாவுடன் இணைந்து ஜேசன் சஞ்சய்யும் நடனமாடும் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, கேத்தரின் தெரசா, ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யுடன் ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் அடிச்சா தாங்கமாட்ட” பாடலில் சிறுவயதில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை பெற்ற ஜேசன் சஞ்சய், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் நடனமாடும் காட்சியில் தோன்றியிருப்பது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புரோமோ வெளியாகியதையடுத்து, சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் ஜேசன் சஞ்சயின் நடனத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். சிலர் அவர் எதிர்காலத்தில் இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகமாகலாம் என்ற கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் ஒரு பக்கம் கவனம் பெற்று வரும் நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சயின் சினிமா அறிமுகமும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

‘சிக்மா ஸ்டைல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள முதல் பாடல் வெளியாகிய பின், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jason Sanjay dances like his father Vijay in the movie Sigma New update on the movie Sigma


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->