ஜெயங்கொண்டம் அருகே கருப்புசாமி கோயிலில் கொள்ளையிட்ட திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
The Shock Awaiting a Thief Who Robbed a Karuppusamy Temple Near Jayankondam
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முன்னூரான் காடுவெட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கருப்புசாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர் உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து காணிக்கை மற்றும் கோவிலில் இருந்த அரிவாள்களையும் கொள்ளை அடித்து சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன், கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கொண்டு பொதுமக்களும் கொள்ளையனை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கிராம மக்கள் கண்டுபிடித்து கோவில் உள்ளே வைத்து பூட்டி வைத்துள்ளனர். இதுகுறித்து பொது மக்கள் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளையனை பிடித்து காவல் நிலையம் அழைத்துக் சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் குறித்த நபர், வடவீக்கம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பது தெரிய வந்தது. கருப்புசாமி கோவிலில் உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து அவ்வப்போது பணம் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக அளித்த அரிவாள்களை திருடி சென்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அப்பகுதியில் மின்மோட்டார் களில் காப்பர் வயர் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் செல்வத்திற்கு தொடர்புடையதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
The Shock Awaiting a Thief Who Robbed a Karuppusamy Temple Near Jayankondam