இசைஞானிக்குப் பிறந்தநாள்... தலைவர்கள் வாழ்த்து!
ilayaraja birthday wish
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து தொடர வேண்டும்: நூறாண்டுகள் வாழ வேண்டும்!
எங்களின் இசை மருத்துவரும், உலகின் தலைசிறந்த இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா அவர்கள் 84-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசைஞானியின் தனிச்சிறப்பு என்னவென்றால், தாய், தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரையும் விட, இசையாய் மிக அதிக நேரம் ஒவ்வொருவருடனும் இணைந்திருப்பது தான். இளையராஜா படைப்புகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மன சஞ்சலங்கள், மன அழுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களுக்கும் இலவச மருத்துவமாக அமைவது அவரது இசை தான்.
இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து தொடர வேண்டும். இசைஞானி நூறாண்டுகளைக் கடந்து வாழ்ந்து இசையால் இனிவரும் தலைமுறைகளையும் மகிழ்விக்க வேண்டும்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
ராஜா என்றும் ராஜாதான்! ♥️