ஒழுங்கீன நடவடிக்கை; பழனி சாமிநாதபுரம் காவல் நிலைய போலீசார் மூவர் பணிநீக்கம்..! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று முதன்மைக் காவலர்கள் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணிக்கு செல்லக்கூடிய இடங்களில் சாமிநாதபுரம் காவல் நிலைய போலீசார் கையூட்டு பெறுவதாகவும், பொய் வழக்குகள் பதிவு செய்வதாகவும் தொடர்ந்து மாவட்டக் கண்காணிப்பாளருக்கு புகார்கள் சென்றுள்ளன.

தொடர் குற்றச்சாட்டின் பேரில் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜு, தலைமை காவலர் சுதா ராணி, முதல் நிலை காவலர் மணிகண்டன் ஆகியோரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் விசாரணை செய்து பணியினை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three Police Personnel from Palani Saminathapuram Station Dismissed


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->