கட்சி நிகழ்வுகளில் ஏற்படும் உயிரிழப்புக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டுமா..? தமிழக அரசு மற்றும் அதிமுக பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!
Court Questions Whether Government Should Provide Compensation for Deaths Occurring at Party Events
கடந்த 2023-ஆம் ஆண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆர்.கே.நகர் பகுதியில் 2023 டிசம்பர் 09-ஆம் தேதி அதிமுக சார்பில் மண்டல செயலாளர் நித்யானந்தம் சார்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்வில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி யுவஸ்ரீ என்ற 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தனது மகளின் மரணத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி யுவஸ்ரீயின் தந்தை பி.வடிவேலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் அளித்த மனுவில் நிவாரணம் வாங்க அதிக அளவில் கூட்டம் கூடும் என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தும் போலீஸாரும், அரசு நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
அத்துடன், நிவாரண உதவி வழங்க முறையான ஏற்பாடுகளை செய்திருந்தால் எனது மகள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்க கமாட்டார் என்றும், கூலித்தொழிலாளியான எனக்கும், எனது குடும்பத்துக்கும் எங்களது மகளின் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதால் ரூ.50 லட்சத்தை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவரது மனுவில் மூலம் கோரிக்கை வைத்து இருந்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது ஷபீக், அரசியல் கட்சிகள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஏற்படும் அசம்பாவிதங்களில் பலியானவர்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா என்பது குறித்து தமிழக அரசும், அதிமுகவும் இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
English Summary
Court Questions Whether Government Should Provide Compensation for Deaths Occurring at Party Events