ஒரு நாளைக்கு, ஒரே ஒரு கைதிக்கு 1.6 லட்சம் ரூபாய் செலவு செய்யும் நாடு பற்றி தெரியுமா? பற்றி எறியும் விவகாரம்!
Austria 300 kg prison 160k
ஆஸ்திரியாவில் நடந்த ஒரு விசித்திரச் சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 29 வயதான ஒரு கைதி, 300 கிலோ எடையுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர். இவருக்கான தினசரி பராமரிப்பு செலவு ஒரு சாதாரண கைதிக்கான செலவை விட பத்து மடங்கு அதிகமாக, சுமார் 1.6 லட்சம் ரூபாயாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியன்னா சிறையில் முதலில் அடைக்கப்பட்ட இவரை, பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் கோர்நெபர்க் சிறைக்கு மாற்றினர். அங்கு இவருக்காக தனிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரும்பு கட்டமைப்புடன் சிறப்பு படுக்கை, தனி கழிப்பறை வசதி என அனைத்தும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உடல்நிலை சிக்கல்களை கவனிக்க தனி செவிலியரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த தகவல் வெளியில் வந்ததிலிருந்து ஆஸ்திரிய மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகன் மருத்துவச் சிகிச்சைக்கே மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையில், ஒரு குற்றவாளிக்காக இத்தனை வரிப்பணம் வீணடிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று விமர்சனம் எழுந்துள்ளது.
அந்த நாட்டின் நீதித்துறை தரவுகளின்படி, ஒரு கைதிக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 6000 ரூபாய் செலவாகும். ஆனால், இந்த கைதிக்காக தினசரி செலவு 1.6 லட்சம் ரூபாய் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டதால், வரிப்பணத்தின் பயன்பாடு குறித்த கேள்விகள் எழுந்து, சிறை நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் மீது மக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது.
இச்சம்பவம், சிறைக் கைதிகளுக்கான வசதிகள் மற்றும் வரிப்பணத்தின் நியாயமான பயன்பாடு குறித்து ஆஸ்திரியாவில் பெரிய விவாதத்தை தூண்டியுள்ளது.
English Summary
Austria 300 kg prison 160k